இன்றைய சூழலில் காற்று மாசுபட்டு தூசுக்களும், வாகன புகைகளில் வெளிவரும் கரித் துகள்களும் காற்றோடு கலந்து நுரையீரலுக்குள் புகுந்துவிடுவதாலும், புகை பிடிப்போரே நேரடியாக தார்- கார்பன் மோனாக்சைடு போன்றவற்றை நுரையீரலுக்கு அனுப்புவதாலும் நுரையீரல் தேவைக்கதிகமாகவே சளியை உற்பத்தி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டு விடுகிறது. அதிகமாக உற்பத்தி செய்யப்படும் சளி நமக்கு நஞ்சாகி விடுகிறது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமே நஞ்சாகும்போது சளி மட்டும் என்ன செய்யும்?
சிலர் தூங்கி எழுந்த உடன் அடுக்கடுக்காய் தும்முவார்கள். கண்களில் நீர் வழிய வழிய தொடர்ந்து தும்முவார்கள். இதை தொடர்ந்து தலைவலி, தலை கனம்(இது அந்த தலைக்கனம் அல்ல) எல்லாம் வரும்!